நாங்கள் வளர்ந்த கதை

about yak

பெங்களூரின் சுந்தரமூர்த்தி சாலையில், ஒரு சிறிய வீட்டில், மூன்று முன்னாள் ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆர்வமுள்ள நபர்கள், இந்தியாவில் ஆங்கிலம் கற்றுத்தரும் முறையில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கும் கனவுடன் சந்தித்தார்கள். அப்படித்தான் துவங்கியது டாக்கிங் யாக் இன் பயணம்.

எங்கள் இலக்கு சிறியதாய் இருந்தாலும் அதற்காக நிறைய உழைக்கவேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆங்கிலம் கற்றுத்தருவதற்கான புதிய, நூதனமான, ஆயிரக்கணக்கானவர்களை எளிதில் சென்றடையும் ஒரு செயலியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள் உதயமானது.

எங்கள் முயற்சிக்குப் பாடத்திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளும் அனுபவமும், சிறப்பான உள்ளடக்கமும், திறன் மதிப்பீடு செய்யும் அளவுகோல்களும், மாணவருக்கும் ஆசிரியருக்குமிடையே தகவல் பரிவர்தனையும் தேவைப்பட்டன. அதோடு தொழில் நுட்பத்தினால் கற்பிப்பதை மேம்படுத்துவதற்கான புரிதலும் நாங்கள் சென்றடையப் போகும் இந்திய மாணவர்களைப் பற்றிய சரியான மதிப்பீடும் அவசியமானது. அதற்காக எங்களைத் தயார்படுத்திக்கொண்டோம்.

நான்கு பேரின் உழைப்பால் மட்டும் செய்யப்பட்டதல்ல இந்தச் சாதனை.இந்தப் பணியில் எங்களுக்கு உதவியவர்கள் நூற்றுக்கணக்கானோர். அவர்கள்:

பாடத்திட்டத்தையும் பாடங்களையும், தேர்வு முறையையும் வடிவமைக்கும் ஆசிரியர்கள், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மூன்றிலும் பெரிதும் தேர்ச்சி பெற்ற எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், திரைக்கதை எழுதுபவர்கள், வீடியோ எடிட்டர்கள், திரைப்பட இயக்குநர்கள், ஒலிக்கோர்ப்பு செய்யும் பொறியாளர்கள், ஓவியர்கள், கிராபிக் டிசைனர்கள், UX/UI விற்பன்னர்கள், தேர்ச்சி பெற்ற நகைச்சுவை நடிகர்கள், மேடை நடிகர்கள், பின்னணிக்குரல் கலைஞர்கள். தயாரிப்பாளர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் திறமை வாய்ந்த பல உதவியாளர்கள். இதற்கு மேலாக அத்தனை பேரின் உழைப்பையும் இந்தத் தளத்தின் மூலமாய் ஒரு செயலியாய் உங்களை வந்து அடையச் செய்த திறமையான மென்பொறியாளர்கள்.

எங்கள் அலுவலகத்துக்கு உள்ளே நடந்த பங்களிப்பு இது. வெளியே இன்னும் பல பேர் எங்களுக்குப் பேருதவியாய் இருந்தார்கள்.

இந்தியா முழுவதும் இயங்கும் பல அரசு சாரா இயக்கங்கள், பல்கலைக்கழங்கள், அரசு ஆலோசகர்கள், கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் எங்களுக்குப் பல வகைகளில் உதவினார்கள். குறிப்பாக இந்த முயற்சியைச் செயல்படுத்த நாங்கள் செய்த பரிசோதனைகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் தங்கள் கதவுகளைத் திறந்து விட்ட பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

பெரிய திட்டங்கள் வெற்றி பெற பெரிய சாதனையாளர்கள் தேவைப்படுகிறார்கள். எங்களுக்கு அதுபோன்ற சாதனையாளர்கள் கிடைத்தார்கள். அதில் இருவரை நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லிப் பாராட்ட ஆசைப்படுகிறோம். அவர்களுடைய ஆற்றலுக்கும் ஆதரவுக்கும், அர்ப்பணிப்புக்கும் ஈடு இல்லை. டாக்கிங் யாக் இந்த உயரத்தை எட்டியதற்குக் காரணமே அவர்கள் இருவர் தான்.

முதலாமவர் அர்பிதா ரவீந்திரன். எங்கள் தலமை அதிகாரி. எங்கள் செயலியின் மூழுப் பரிமாணத்தின் புரிதலுடன் தொழில்நுட்ப ரீதியாய் எங்கள் செயலி வெற்றிபெறச் செய்தவர். எங்கள் படைப்பின் திறணையும் பயன்பாட்டையும் பலமடங்கு அதிகரிக்கச்செய்தவர். அதோடு மட்டுமல்லாமல் எங்கள் தளம் செயல்வடிவம் பெற, அதனுடன் இணைந்த பல இணைப்புச் செயலிகளையும் இணைத்து திட்டமிட்டு முடித்தவர். எங்கள் நிறுவனம் மேற்கொண்ட இந்தப் பயணத்தில் எங்களுக்கு வழிகாட்டியாய் இருந்து நடத்திச்சென்றவர் அவர்தான். அவருக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றி.

இரண்டாவது நபர். யாமினி ரவிச்சந்திரன். என்னுடைய சக டைரக்டர். இந்தப் பயணத்தில் துவக்கத்திலிருந்து எனக்கு உறுதுணையாய் இருந்தவர். டாக்கிங் யாக் நிறுவனத்தை அறிந்தவர்களுக்குத் தெரியும் இந்த நிறுவனம் உருவாகவும் உறுதிபெறவும் காரணம் அவர் என்பது. எங்கள் திட்டத்தின் ஒவ்வொரு பெரிய பகுதியைச் செயல்படுத்தியதிலும் இந்த நிறுவனத்தின் முன்னேற்றத்திலும் பெரும்பங்கு வகித்தவர். அவருடைய ஏராளமான பொறுப்புகளில், பாடத்திட்டத்தை வடிவமைப்பது, பாடங்களை வடிவமைப்பது, பாடங்களைத் தயாரிப்பது போன்ற பெரிய சாதனைகளும் அடங்கும். மேலும், மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவங்கள் என்று பலருக்கு எங்கள் தளத்தையும் செயலியையும் கொண்டு செல்லக் காரணியாய் இருந்தவர். அன்றும், இன்றும், என்றும் எங்கள் பயணதில் அவர் எங்களுடன் இருப்பார்.

இந்தச் செயலி செயல்வடிவம் பெற உழைத்த அனைவருக்கும் நாங்கள் பூரிப்புடன் சொல்லுக்கொள்வது இதுதான். “ நம்முடைய ஒன்றிணைந்த செயல்பாட்டால், இந்தியாவில் தாய் மொழியில் ஆங்கிலம் கற்றுத்தரும் முறையில் நாம் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளோம் என்று நாம் ஒவ்வொருவரும் பெருமைப்படலாம். நாம் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளோம்.

இது முன்னே வந்த மணி ஓசை தான். நம் வருங்காலச் சாதனைகள் என்கிற யானை பின்னே வந்துகொண்டிருக்கிறது.

என் சார்பாகவும், எங்கள் நிறுவனம் சார்பாகவும்,"இந்த உலகமெங்கும் இருக்கும் கோடிக்கணக்கான ஆங்கில ஆர்வலர்கள்" சார்பாகவும் - நன்றி.

உங்கள்,

டாம் லாட்டினோவிச்

தாமஸ் லாட்டினோவிச் டாக்கிங் யாக் ஐ உருவாக்கிய முதன்மை அதிகாரி. அமெரிக்காவின் சிலிகன் பள்ளத்தாக்கு பல ஆண்டுகள் என்று ஆழைக்கப்படும் கலிபோர்னியா மாநிலத்தில் பல ஆண்டுகள் @Home Network, Excite@Home, Matchlogic போன்ற முன்னணி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளில் வெற்றிகரமாய்ப் பணிபுரிந்ததைத் தொடர்ந்து Jingle Networks / 800-FREE411, என்கிற வெற்றிகரமான நிறுவனத்தை நிறுவினார். பத்து ஆண்டுகள் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும், மத்திய அமெரிக்க நாடுகளிலும் வடக்குக் கலிபோர்னியாவில் வந்து குடியேறிய எளிய மக்களுக்கு ஆங்கிலம் கற்றுத்தருவதற்கான பணியில் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார். ஆங்கிலம் கற்றுத்தருவதன் மூலம் மாணவர்களை நூறு சதவிகிதம் ஆங்கிலத்தில் நல்ல தேர்ச்சி பெறச்செய்து அவர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்கச்செய்வதில் நிபுணர். 2015 இல் அந்தப் புரிதலோடு இந்தியாவுக்கு வந்து டாக்கிங் யாக் ஐ நிறுவினார்.

தாமஸ் லாட்டினோவிச்
நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
யாமினி ரவிச்சந்திரன்
நிர்வாகக் குழு அங்கத்தினர்
ஸ்ரீதர் ரங்கநாதன்
நிர்வாகக் குழு அங்கத்தினர்