சுலபமான,
சுவாரசியமான வழியில்
ஆங்கிலம் கற்றுக்கொள்ள
உங்களை வரவேற்கிறோம்.
டாக்கிங் யாக் - தமிழ் வழி ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆண்ட்ராயிட் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஒரு செயலி.
எங்கள் பாடத்திட்டம் சாதுர்யமாய்க் கட்டமைக்கப்பட்ட நானூறுக்கும்/400 க்கும் மேற்பட்ட வீடியோக்கள், ஆயிரத்துக்கும்/1000 க்கும் மேற்பட்ட பயிற்சிகள், பத்தாயிரத்துக்கும் /10000 க்கும் மேற்பட்ட வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்கள் அடங்கியது. ஒவ்வொரு மாணவரின் திறமைக்கு ஏற்ப, போதிக்கும் முறையை மாற்றி வழங்கும் நூதன நுட்பம் கொண்டது. துவங்கிய சில மாதங்களிலேயே மாணவர்களைச் சரளமான நடைமுறை ஆங்கிலம் பேச இலகுவாய் முன்னேற்றும் திறமை உள்ளடங்கியது.



முக்கிய அம்சங்கள்
டாக்கிங் யாக் இன் பயிற்றுவிக்கும் முறை நூதனமானது. துரிதமாகப் புரிந்துகொள்ளவும், வலுவான பயிற்சிகள் மூலம் கற்றுக்கொண்டவை மனதில் பதியச் செய்யும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயலியில் பொருளடக்கமும், கற்றுத்தரும் முறையும் பின்னிப்பிணைந்து, மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் பேசும் சூழலை எளிதாக உருவாக்கும்.


செயலியின்
பகுதிகள்
டாக்கிங் யாக் இன் பாடத்திட்டம் ஐந்து முழுமையான பகுதிகளின் ஒருங்கிணைப்பில் உருவானது.
ஆங்கிலத்தை வேகமாகப் படிக்கவும், படித்ததைப் புரிந்துகொள்ளவும், சரியான இலக்கணத்தைப் பிரயோகிக்கவும் மாணவர்களைத் தயார்படுத்தும்.
சுலபமாக, சரளமாக, சரியான உச்சரிப்பில் ஆங்கிலத்தைப் பயன்படுத்த உதவும்.


இலக்கணம்
ஆங்கில இலக்கணத்தைக் கண்டு நீங்கள் அச்சப்படாத வண்ணம் படிப்படியான வடிவமைப்பு முறை மூலமாய் ஆங்கில இலக்கணத்தை நீங்கள் வசப்படுத்தலாம்.
உரையாடல்
அன்றாட வாழ்க்கையின் பல உரையாடல்களைப் பாடமாக மாற்றியிருக்கிறோம். ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதுபோன்ற உரையாடல் பகுதிகளைக் கற்பதன் மூலமாகப் பல சமூகச் சூழல்களில் இயல்பாக உங்களால் மற்றவர்களுடன் உரையாட முடியும்.
ஃபோனிக்ஸ்
ஆங்கில வார்த்தைகளை மனப்பாடம் செய்ய அவசியம் இல்லை. ஒலிகளின் அமைப்பு சார்ந்து வார்த்தைகளைக் கற்றுத்தரும் எங்கள் முறையில் புதிய வார்த்தைகளை நீங்கள் கிரகித்துக்கொண்டு விரைவாகப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.
மொழி ஆளுமை
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வார்தைகளை அறிமுகப்படுத்தும் எங்கள் செயலி உங்களைக் கடினமான உரையாடல் சூழல்களுக்கும் தயார் செய்யும்.
பேச்சுத்திறன்
வரிவடிவத்திலிருந்து சரியான உச்சரிப்புக்குக் கொண்டு செல்லும் எங்களுடைய ப்ரத்யேக நுட்பத்தின் உதவியுடன் பல பயிற்சிகள் அளிக்கப்பட்டு உங்களுடைய ஆங்கில உச்சரிப்பைச் செழுமைப்படுத்துவோம்.
நிறுவனங்களுக்கான பயன்கள்

டாக்கிங் யாக் செயலி பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழங்கள், தனியார் நிறுவனங்கள் என்று பல அமைப்புகளால் பயன்படுத்தப்படுகிறது.உங்கள் கல்வி நிறுவனங்களில் எங்கள் செயலியை அறிமுகப்படுத்த விரும்பினால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்.
பயன்கள்
ஆசிரியர் பயிற்சி, வேலை வாய்ப்பு, உள்ளூர் மொழியில் பயிலும் மாணவர்களின் ஆங்கில அறிவைச் சமன் செய்தல், திறன் மேம்பாட்டுத் திட்டம், என்று பல முறைகளில் எங்கள் டாக்கிங் யாக் பயன்படுத்தப்படுகிறது.
விரிவான அறிக்கைகள்
எங்கள் செயலி ஒவ்வொரு மாணவனின் பலம் மற்றும் பலகீனம் குறித்தும், ஒரு குழுவிலிருக்கும் மாணவர்களின் தனித்தன்மையான திறன் குறித்தும் விரிவான ஆய்வறிக்கைகள் தரும்.
பாடத்திட்டம்
எங்கள் பாடத்திட்டத்தை உங்களின் தேவைக்கேற்ப ஆழமாகவும் அகலமாகவும் விரிவு படுத்தலாம். இதன்மூலம், கல்வி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பாடத்திட்டத்தை மாணவர்களின் தேவைகளை மனதில் கொண்டு பயன்படுத்த முடியும்.
ஆசிரியர் வழிநடத்தல்
எங்கள் செயலியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எங்களின் ஆசிரியர் ஒருவர், திட்டத்தை வழிநடத்திச் செல்ல ப்ரத்யேகமாக நியமிக்கப்படுவார்.
எளிதான செயல்பாட்டுமுறை
எளிதில் நிறுவி செயல்படுத்தக்கூடிய எங்கள் செயலியில் பொதிந்துள்ள மாணவர்களின் பின்னூட்ட முறை ஒவ்வொரு மாணவனின் முன்னேற்றத்தைக் குறித்து உடனுக்குடன் தகவல் தருவதோடு ஆசிரியர்களின் வேலைப்பளுவை வெகுவாகக் குறைக்கிறது.
சான்றிதழ்
எங்கள் டாக்கிங் யாக் பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்வது ஒரு சாதனை. அந்தச் சாதனையை நிகழ்த்தும் ஒவ்வொரு மாணவருக்கும், வழி நடத்தும் ஆசிரியருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
நிறுவனங்கள்
தொடர்பு கொள்ள
உங்கள் நிறுவனம் எங்களோடு இணைந்து செயலாற்ற விரும்பினால் இந்தப் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள். உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
நான் ஓர் ஆர்வமுள்ள
தனிநபர்
தற்போது எங்கள் செயலி தனி நபர்களின் உபயோகத்திற்காகத் தயாராக இல்லை. ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படிவத்தில் விவரங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தனிநபர்களுக்கான எங்கள் நிரலி தயாரானவுடன் உங்களை அணுகுகிறோம்.
உங்கள் நிறுவனம் எங்களோடு இணைந்து செயலாற்ற விரும்பினால் இந்தப் படிவத்தை நிரப்பி அனுப்புங்கள். உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.
தற்போது எங்கள் செயலி தனி நபர்களின் உபயோகத்திற்காகத் தயாராக இல்லை. ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படிவத்தில் விவரங்களைத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். தனிநபர்களுக்கான எங்கள் நிரலி தயாரானவுடன் உங்களை அணுகுகிறோம்.
எங்களோடு இணைந்து இந்தியாவில் ஆயிரமாயிரம் மாணவர்களுக்கு ஆங்கிலத்தைப் போதிக்கும் முறையை மாற்றி அமைக்க உங்களை அழைக்கிறோம். எங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புகளைக் குறித்து அறிய இங்கே சொடுக்குங்கள்.
